கடவுள் வேறில்லை

ஆச்சரியங்களுடன் ஆயிரம் கேள்விகள் -
அத்துனை மனச்சுமையும்
சிதைந்து சின்னா பின்னமாகிவிடுகிறது
உன் மாய சிரிப்பில் ..............

முக சோர்வுகள் கூட முதிர்வடைந்து
புத்துயிர் பெற்றுவிடுகிறது
உன் முத்த மழையில் ..............

எல்லா விளையாட்டுக்களும்
ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன
உன்னோடு ஆடும் விளையாட்டை ..........

உன் கைகளை பிடித்து
கால்கள் நடக்கையில்
உலகமே இன்பமயமானதாய்
ஓர் நினைப்பு ............

நீ ஆச்சரியமாய் பார்க்கும்
அத்தனை காட்சிகளிலும்
ஆனந்தமடைகிறது என்நெஞ்சம் ............

உன்னை பயமுறுத்தி பயமுறுத்தி
திருப்பதி பட்டுக்கொள்கிறது
என் சிரிப்பு .............

உன்னுடன் விளையாடும்
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
காணாமலே போகிறது
என்னுடைய துன்பமெல்லாம் ...........

கடவுளுக்கு கருணை அதிகம் என்பதனை
உன்னை பார்த்துதான் நான் புரிந்துகொண்டேன்
காரணம்,
கடவுள் வேறில்லை .............


அன்புடன்
கவிஞர் சுந்தர வினாயகமுருகன் , புதுவை

எழுதியவர் : வினாயகமுருகன் (29-Jul-15, 12:58 pm)
Tanglish : neeye en theivam
பார்வை : 62

மேலே