naanayam

நாங்கள்
நாணயத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்
தலை விழுந்தால்
மட்டைப்பந்து விளையாடுவோம்
பூ விழுந்தால்
சினிமா பார்ப்போம்
நட்டக்குத்தலாய் விழுந்தால் மட்டுமே
பள்ளிக்கூடம் செல்வோம்
நாங்கள்
நாணயத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்...

எழுதியவர் : உதய நிலா (20-May-11, 5:19 pm)
சேர்த்தது : kaarthikeyan
பார்வை : 382

மேலே