தோழி நம் நட்பு

தோழி !
நம் நட்பு
கவிஞர்கள் எழுதாத கவி..
சூரியன் பொழியாத ஒளி..
தேன் உறிஞ்சும் வண்டு
பூவிற்கு கொடுக்காத வலி..
கலப்படம் இல்லாக் கலை..
காவியங்களில் பேசாத மழை..
காற்று கூடி மொழியும்
காந்தத்தின் ஈர்ப்பு விசை..
பேசிட தேவை இல்லை..
பேதமும் கணக்கில் இல்லை..
காதோரம் கேட்கும் உன்குரலோசை
நினைவுகோ என்றும் பஞ்சம் இருந்ததில்லை..
மண்ணுக்குள் போகும்வரை
மனதில் உன் நினைவிருக்கும்..
பிரிந்தவுடன் அழிய
கடற்கரை கால்தடமல்ல நம் நட்பு..
உயிரில் வரைந்த ஓவியம்
உணர்விருக்கும் வரை
ஒன்றியிருக்கும் என்னோடு..


அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (2-Aug-15, 12:13 am)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
Tanglish : thozhi nam natpu
பார்வை : 389

மேலே