விடியலுக்காக ஏங்கும் உள்ளம்

விடியலுக்காக ஏங்கும் உள்ளம்
இன்று கலங்குதம்மா
கண்ணீர் சிந்தும் வாழ்க்கையிலே
இன்று காலங்கள் மூழ்குதம்மா

எதுவரை பொறுக்கணுமோ
மனசும் அதுவரை பொறுக்குதம்மா
இனியொரு ஜென்மமிருந்தால்
அதை இத்துடனே முடிக்குதம்மா

இளமையில் கழிக்கும்
காலங்கள் யாவும்
சிறையினில் கழிக்குதம்மா
இதயத்தில் இருக்கும்
நினைவுகள் யாவும்
உறவினை சுமக்குதம்மா

உயிரை தாங்கும்
உடலும் இங்கே
உதிரத்தை கொதிக்குதம்மா
உணர்வுகள் தாங்கும்
நரம்புகள் இங்கே
வெந்நீரில் துடிக்குதம்மா

பந்தங்கள் பாசங்கள்
பழகிய நினைவுகள்
இதயத்தை நனைக்குதம்மா
தன்னுலகை விட்டு
வெளியுலகைக் கண்டு
வார்த்தைகள் தவிக்குதம்மா

எதிர்கால இலட்சியங்கள்
எண்ணற்ற கனவுகள்
எல்லாமே கலைந்ததம்மா
வாழவும் முடியாமல்
சாகவும் முடியாமல்
உணர்வுகள் இருக்குதம்மா

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:25 am)
பார்வை : 354

மேலே