திருமண நாள்

அன்று ஒரு நாள் ஆனந்தம்
சொல்ல முடியா ஆனந்தம்
மனம் நிறைய கனவுகள்
உள்ளம் பொங்கும் சந்தோசம்
உறவுகள் புடை சூழ உற்றார்கள் உடனிருக்க
ஏதோ ஆகாயத்தில் பறப்பது போல்
அளப்பரிய ஆனந்தமும் மகிழ்ச்சியும்
அந்த ஒரு நாள் அதுவே திருமண நாள்
வாழ்வில் எத்துணை கஷ்டங்கள் வந்த போதும்
அந்த நாளை மட்டும் மறக்க முடியாது
இரண்டு சிறகுகள் கொண்ட
சுதந்திரப் பறவைகளாக கூட்டிலிருந்து
வெளியேற்றி பறக்க விட்டனர் பெற்றோர்
அந்தப் பறவைகள் பறந்த நாள் எவராலும் மறக்க இயலாது
திருமணம் வாழ்கையில் ஒரு வெகுமானம்
இறைவன் இணைத்த பாலம் திருமணம்
இதில் பந்தமும் சொந்தமும் உருவாகிறது
நண்பர்கள் தினம் அன்னையர் தினம் தந்தையர் தினம்
காதலர் தினம் பிறந்த தினம் கொண்டாடுவது போல்
திருமண நாளும் ஒவ்வொரு தம்பதியருக்கும்
மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததே
சிலர் வாழ்வில் இந்நாளைக் கண்டுகொள்வதில்லை
வாழ்வில் அர்த்தம் கொண்ட நாள் இதுவாகும்

எழுதியவர் : பாத்திமா மலர் (2-Aug-15, 9:03 pm)
Tanglish : vegumaanam
பார்வை : 121

மேலே