ஆதிமகள் ஒளவை
ஆதிமகள் ஒளவையே
அமுதமொழி சொன்னாயே
அனைவருமே படித்திட
ஆத்திச்சூடித் தந்தாயே
கொடுமைகளைக் குறைத்திட
கொன்றைவேந்தன் கொடுத்தயே
குச்சிஊன்றிக் கொண்டுநீ
கோடிநன்மை செய்தாயே
இளமைஉருவம் துறந்துநீ
முதுமைவடிவம் கொண்டாயே
இருந்தகாலம் வரையிலும்
இனியக்கருத்து சொன்னாயே
உலகிலுள்ள மக்களில்
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
சாதிஇரண்டு என்கின்ற
சத்தியத்தை சொன்னாயே
நெஞ்சில்நிறுத்திப் படித்திட
நீதிநெறி விளக்கமும்
பார்த்துப்பார்த்துப் படித்திட
பழமொழிகள் தந்தாயே
மாடுமேய்க்கும் சிறுவனிடம்
சூடில்லாதப் பழம்கேட்டு
அழகுசி்றுவன் அவனிடமும்
அனுபவத்தைப் பெற்றாயே
நீண்டகாலம் வாழ்ந்திடும்
நெல்லிக்கனி கிடைத்ததும்
நாடுகாக்கும் மன்னனுக்கு
நலம்விரும்பி தந்தாயே
ஒளவையென்றால் அன்பென்று
அனைவருக்கும் உணர்த்தியே
அந்தகால மன்னர்களை
அழிவினின்று காத்தாயே
கற்றுக்கற்று உயர்ந்திட
கல்விஒழுக்கம் தந்தாயே
உலகமெங்கும் கடைபிடிக்க
உலகநீதி சொன்னாயே
ஒளவைசொல்லை அனைவரும்
அகத்தினிலே நிறுத்துவோம்
அன்றாடம் அதைப்படித்து
அமைதிவாழ்வு வாழுவோம்
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

