சுவர்

சுவர்

சரித்திரம் பார்த்தவனே
நீ
சாகாவரம் பெற்றவனே

சித்திரம் கொண்டவனே
நீ
தினமும் ரசிப்பவனே

சுவர் என அழைப்பவனே
நீ
விளம்பர ஊழியனே

நிலை பெற்றவனே
நீ
மலையின் மறுபிறவியே

முல்லை வளர்த்தவனே
நீ
அவன் தேரின் இரத்த பந்தமே

எட்டுக்கால் பூச்சி
அவன்
எட்டி பிடிப்பவனே

நாங்கள் அசுத்தம் செய்கிறோம்
என
கண்கள் மூடுபவனே

பெண்கள் வெட்கம் கொள்ளும்போது
அவள்
நளினம் உணருபவனே

கள்வருக்கு களவும் நீயும்
தினமும் எட்டிபிடிப்பது
ஆவல் ஆகுமே

காவலருக்கு களவும் நீயும்
தினமும் கட்டிகாப்பது
சவால் ஆகுமே

உன்னை கட்டினது
பல பேர் ஆகுமே

உன்னை கட்டி ஆக்கினது
பல பேர் காரணமே

பூமியை தரம்பிரிப்பது
சாமியை தடம்பிரிப்பது

கூலி கரம்பிடிப்பது
வேலி நிலம்பிரிப்பது

உன் மேல் கொண்ட பிரியமே

வாழ்ந்து காட்டும்
கட்டிட தொழிலாளர்கள்

வாழ்வது குடிசையில்தான்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (3-Aug-15, 9:11 am)
Tanglish : suvar
பார்வை : 130

மேலே