உந்தன் நினைவுகள்
மனசில் எழுதிய காதல்
நினைவோடு வாழும்
கரையில் எழுதிய காதல்
அலையோடு மறையும்
உன் காதல்.........
மனசில் எழுதியதா? இல்லை
கரையில் எழுதியதா?
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நான் உயிரோடு வாழ்வதற்கு..
விடியில் பொழுதினில் தினமும்
உந்தன் நினைவு தான்
வீதியோரமும் தினமும்
உந்தன் உருவம் தான்
தென்றல் ஒருநாள் வீசல
உயிர்கள் அந்நாள் மடிந்திடும்
உன்முகம் ஒருநாள் காணல
என் மனம் அந்நாள் வாடிடும்
எந்தன் தோட்டத்தில் என்றும்
உந்தன் வாசம் தான்
எந்தன் மூச்சினில் என்றும்
உந்தன் ஜீவன் தான்
வானம் ஒன்று இருப்பதால்
நிலவும் தினமும் வருகுது
இதயம் ஒன்று இருப்பதால்
நினைவுகள் தினமும் வருகுது