அம்மா உனக்காய்,

ஆயிரம் வலிகள் கண்டாய்,
எனக்கு உயிர் தரவே........
ஆயினும் நீ கொண்டாய்,
ஆனந்தம் என் வரவால்...

உன் பாசமே எனக்கு தாலாட்டான,
உன் மடியே எனக்கு தலையணையான,
உன் அணைப்புக்களே எனக்கு போர்வையான,
அந்நாட்களை என்றுமே ஆசிக்கிறேன்...

'அம்மா' என்ற வார்த்தை போதும்
இங்கே, அன்புக்கு அகராதி எழுதிட...
அவள் புன்னகையின் ஓர் துளி போதும்
பூலோகம் பூத்துக் குலுங்கிட...

பிறந்த நாள் காணும் உனக்காய்,
படைத்தவன் முன் மண்டியிடுகிறேன்...
அவன்பால் கொட்டிக் கிடக்கும்
அருளை உனக்காய் யாசிக்கவே!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (3-Aug-15, 7:58 pm)
பார்வை : 401

மேலே