எதுவும் முடியவில்லை

என் விழிகள் துடிப்பது
உன்னை காண
உதடுகள் துடிப்பது
உன்னோடு பேச
இதயம் துடிப்பது
உன்னை தாங்க
இளமை துடிப்பது
உன்னோடு வாழ
ஆனால் இன்று
என்னால் எதுவும்
முடியவில்லை
உன்னை பிரிந்ததால்....

அன்று
உன்னை
அணைத்த போது
என் இதயம் இசைத்தது
இன்று
உன்னை பிரிந்த போது
என் விழிகள் நனைந்தது
அத்துடன் என் இதயமும்
இசைக்கவில்லை
உன் நினைவுகளை ஏற்று
வலிக்கிறது
உன் பிரிவுடன்.

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:34 am)
பார்வை : 294

மேலே