ஆறா வடு
மனதின் பேராசை, ஆனது நிராசையாய்
மாறிய நிமிடம்
என்னைத் தொட்டு நிற்கும் என் நிழல்
எள்ளி நகைக்கின்றது.
காத தூரம் ஓடியபின்னும்
சிரிப்பொலி மறையவில்லை.
வாழ்வு முழுமைக்கும் பரவி நிற்கும்
அந்த வெட்கிக்
குனிந்த அந்தத் தலைகுனிவு,
ஆறா வடு, ஆறாத புண்ணினால்.