பேசும் கவிதை

மரணித்தும் போராட்டத்தில் மாற்றமில்லை -
உடலை வாங்க உறவுகள் மறுப்பு -
காத்துக்கொண்டு இருக்கிறார் காந்தியவாதி ............
கருணை காட்டவேண்டிய அரசாங்கமோ
கலவரத்தை தூண்டுகிறது -
அதிகாரம் அதட்டி பார்க்கிறது ............
சசிப்பெருமாளின் சத்தியப்போராட்டதில்
உயிர்தியாகம் உணர்ச்சிப்பேரலையை
உருவாக்கியிருப்பது சத்தியமே ............
பள்ளிக்கு செல்லவேண்டிய பச்சிளம் குழந்தை
போராட்டகளத்தில் ஏக்கத்தோடு காத்திருக்கிறது -
என்றைக்கு மதுவிலக்கு ?
புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?
தந்தையின் எண்ணத்தை நிறைவேற்றி
தமிழகத்தை மீட்டுக்க
இதோ இவளுக்குள் எவ்வளவு ஆதங்கம் ...............
பேதையின் முகமே பேசும் படமாகிவிட
ஆழ்ந்த வரிகளின் ஆதங்கம் கூட
தேவைப்படமலேயே .............
தந்தையின் இழப்பு பேரிடியாய் இருந்தபொழுதும்
எத்தனையோ குழந்தைகளின் தந்தைகளை காக்க
இத்தகைய புனித போராட்டம் ..........
சக பெண்களின் வலியை உணர்ந்ததாலோ என்னவோ
சரியான நேரத்தில் படைஎடுத்திருக்கிறாள் -
புனித போராட்டங்கள் பெரும்பாலும்
வெற்றியையே இலக்காக்கி இருக்கின்றன .........
சுதந்திரதேவிக்களின் அவதாரங்கள்
எல்லாமே அவசியங்களில்தான் பிறக்கின்றன-
துணிதளோடு துளிர்த்தல்
சமூகத்திற்கு அவசியத்தேவையே .............
தேவைதான் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்
மதுவிடமிருந்து மனிதனை காக்க .
வாழ்க பெண்ணியம் !!!!