நிழல்
சில நேரம்…
என் காலடியில் பணிந்து
அடிமையாய் நின்றாய்!
சில நேரம்…
தோளுக்கு மேல் உயர்ந்து நின்று
மிரட்டினாய் என்னை!
முன்னே சென்று
வழி நடத்தும் தலைவனும் நீ!
என் ஆணைக்கு
பின்னே வரும் தொண்டனும் நீ!
சிரிப்பிலும்…
அழுகையிலும்…
பிரியாமல் தொடரும் நட்பு,
கடவுளிடம் கேட்காத வரம்,
நீ… என் உடன்பிறப்பு,
உன் குரல் கேட்க
ஆசை எல்லோருக்கும்,
வேண்டாம்…
நீ பேசினால்,
என் பயங்கள் பகிரங்கமாகும்,
கடந்துபோன நினைவுகள்
நின்று கொல்லும்,
ஆதலால்…
நீ மௌனமாகவே இரு!
என் நிழலாகவே இரு!
****
© பூம்பாவை