மழை வெயில் நட்பு

எனக்கு வண்ணத்துப் பூச்சி பிடிக்கும்
என்பதாலேயே அதைப் பிடித்த போது
என்னுடைய விரல்கள்
வண்ணங்களால் நனைந்துவிட்டது

விட்டுவிட மனமில்லாமலும்
வைத்துக்கொள்ள வழி தெரியாமலும்
விரல்களுக்கிடையிலும்
உள்ளங்கைகளுக்குள்ளும்
அதன் வண்ணங்கள் தீரும் மட்டும்
இடம் மாற்றிக் கொண்டிருந்தேன்

வண்ணங்கள் தீர்ந்தவொன்றை
வெறும் பூச்சியென்றே
துரத்தி விட்டனர்….
அதன்பிறகு அவ் வண்ணத்துப்பூச்சி
என் பார்வைக்குள் வரவேயில்லை

வெயிலுக்கு முன்னமோ
மழைக்கு பின்னரோ
பச்சை வெளியெங்கும்
என் நட்புச் செல்லத்தைத் தேடித் திரிகிறேன்...

எழுதியவர் : புதிய கோடங்கி (6-Aug-15, 10:40 pm)
Tanglish : mazhai veyil natpu
பார்வை : 110

மேலே