சுதந்திரம்

சுதந்திரம்!
ஆணவ அதிகாரத்தில்!
மந்தையாய் அடிமையாய்!
மண்டி இட்ட ஈனத் துரும்பாய்!
இத்துப் போன இதயங்களின்!
இறுமாப்பில் இரத்தமாய் இருந்து இறந்த இறுதி சடங்கின் அனுதாபம்!
பிரேதக் குவியலின் பிண வாடையில் கிடைத்த பிச்சை!
ஆங்கிலேய சண்டியரின் அதிகாரச் சறுக்கல்!
பாட்டன் முப்பாட்டன் பட்ட வலியின் ஓலம்!
நாம் பாடும் தேசிய கீதம்!
வாழ்க பாரதம்! வளர்க பாரதம்!