எங்கோ மனிதன்

மனிதர்களின் எண்ணிக்கை கணக்கீடுகளை
கணிப்பதில் தவறேதும் செய்ததில்லை
கணினிகள் - இருந்தும் மனிதர்களை கணிக்க
தவறி இருக்கின்றன என்பதே உண்மை .

தோற்றங்களில் இல்லை
மனிதனின் அடையாளம்
செயல்களின் உயர்வான நோக்கங்களிலே
மனிதர்கள் வெளிப்படுகிறார்கள் .

மனிதனை புனிதப்படுத்துவது
மனிதமே - மனிதநேயமே .

தனக்காக வாழ்பவன்
என்றைக்கும் மனிதனாய் வாழ்ந்ததில்லை
இது வரலாற்றின் உண்மை -
பிறர்க்காக வாழ்வபனே மனிதன் .

சுயநல தேடலில் பொது நலம்
கண்களுக்கு தெரிவதில்லை
உண்மை உணரப்படுவதில்லை
நியாயம் மதிக்க படுவதில்லை .

மனித அவதாரத்தில்
எத்தனையோ மிருகங்கள்
உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன
அனுபவங்களே அடையாளம் காட்டும் .

நேர்மையும் எளிமையும்
இரக்க குணமும் - அன்பு அணுகலும்
செயலில் பொறுமையும்
மனிதனை அடையாளப்படுத்தும் இலக்கணம் .

இத்தனை இலக்கணங்களோடு
யாரோ ஒரு சிலரே -
அதிசயமாய்
அபூர்வமாய் .

விசித்திரங்களின் ரகசியங்கள்
எங்கோ ஒளிந்து கிடப்பது போல்
மனிதர்களும் எங்கோ
ஒளிந்து கொண்டுதான் கிடக்கின்றனர் .

எழுதியவர் : வினாயகமுருகன் (16-Aug-15, 9:11 am)
Tanglish : yengo manithan
பார்வை : 378

மேலே