மனதுக்குள் அழும் இதயம் 555

உயிரே...

நீ என்னை காக்க வைக்கும்
நேரங்களில் கூட...

உனக்காக காத்திருந்தேன்
காத்திருப்பு சுகம் என்றே...

இன்று நீ என்னை பிரிந்த
போதுகூட...

அந்த வலியும் கூட
சுகமாகதானடி நினைக்கிறன்...

உன்னை மட்டுமே நினைக்க எனக்கு
கிடைத்த வரம்தானடி அது...

காதல் செய்வதற்கு மொழிகள்
எதற்கு சொல்கிறார்கள்...

இப்போதுதானடி புரிந்தது...

காதல் பிரிவில் அழுவதற்கு
மொழிகள் தேவை இல்லையடி...

வாய்விட்டு கூட அழுவ
முடியாமல்...

மனதுக்குள் அழுவதால்தானடி...

உள்ளுக்குள் அழுவது உனக்கு
தெரியாதடி கண்ணே...

உன் கண்முன்னே நிற்கும்
என்னையே தெரியவில்லை...

அழும் இதயமா
தெரியபோகுது உனக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Aug-15, 3:56 pm)
பார்வை : 619

மேலே