கோழியா முட்டையா
ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு. ''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர்.
'கோழியில் இருந்து முட்டைவந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கஷ்டமான கேள்வி.
அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழி வந்தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல்றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு மாணவர் சொன்ன பதில்?
கொஞ்சம் நல்லா யோசிங்க......
விடை: 'நீங்கள் ஒரே ஒரு கேள்விதான் கேட்பதாகச் சொன்னீர்கள். இப்போ கேட்பது இரண்டாவது கேள்வி' என்றார் சிரித்துக்கொண்டே. இந்த ஸ்மார்ட்டான பதிலுக்காகவே அவருக்கு அதிக மார்க் விழுந்தது!

