எங்கே அவர்

என்ன ஆச்சு...?
இப்பத்தானே - எங்கிட்ட
பேசினாரு ...!
நான்கூட பார்த்தேனே -
சாய்ந்திரம்
மளிகைக் கடையில்
காய் வாங்கிட்டிருந்தார்.
அதுக்குள்ளே எப்படி...?

நாற்காலியில்
சாய்ந்து இருந்தவரின்
மார்பின் மீது -
ஒருவர் அழுத்தி
முதலுதவி செய்ய, செய்ய
டொயிங் ... டொயிங் ...
ஆம்புலன்ஸ் -
மருத்துவ மனைக்கு - விரய !

ஒருமணி நேரம் -
கழித்து
கால் பெரு விரல்கள்
கட்டப்பட்டு -
மூக்கில் பஞ்சு வைத்து
வெள்ளை துணி
போர்த்தி
வந்து இறங்கினார் -
சடலமாய் !

கம்பீரமாய் நடந்த
உருவம்...
சடலமாய் - வெள்ளை
துணி போர்த்தி ;
தலைமாட்டில்
விளக்கு !
நெருங்கிய நண்பர்
ஆளுயர -
ரோஜா மாலையை
அதிர்ச்சி கலந்த
சோகத்துடன்
போட...!

அண்டை வீட்டார்கள் -
தொலைபேசியிலும்
அலைபேசியிலும்
பேசி.... எங்கள்
உறவுகளை
அழைத்தனர்.
அம்மாவுக்கும் -
அக்காவுக்கும், எனக்கும்
ஆறுதல் சொல்லினர் !

இரவு கூட சோகமாய்
மௌனித்தது.
அவர் வளர்த்த - நாய்
ஒரு முறை அருகில்
வந்துவிட்டு -
காலையில்
தன பசிக்கு
எழுந்து தீனி தருவார் -
என்று நம்பி -
நகர்ந்தது.

நங்கள் அழுதோம் -
அம்மா மட்டும்
அதிர்ச்சியில்
இருந்து மீளவேயில்லை.
இரவு முகம் மூடி
வெளிச்ச முகம் காட்ட -
சொந்த பந்தங்கள்
வரத்தொடங்கினர்.
ஆறுதல்கள்
பரிமாற்றம் ;
சாஸ்த்திர, சம்பிரதாயங்கள்
முறைப்படி நடக்க...
மீளாப் பயணம்
தொடங்க -
சிதையில் கிடத்திய
உடலை - தீ விரல்கள்
வருட! வருட!
அவர் - சாம்பலாய்
உருமாறிக் கொண்டிருந்தார் !

எங்கள் வீட்டின் -
மரண அமைதிக்கு
நடுவே -
திடீரென்று
ஒரு கதறல் -
அவர் சொன்னாரே ....
"நான் செத்தாதாண்டி
உனக்கு என்
அருமை தெரியும்" !
எங்களுக்கும்
ஆச்சரியமாய்
இருந்தது ;
அப்பா சொன்ன
வார்த்தையின்
பொருள்.... விளங்க ...!

பால் வாங்க ;
எங்களை பள்ளிக்கு
கூட்டிச் செல்ல ;
சோர்ந்தபோது
ஊக்கப்படுத்த ;
தன் மகிழ்ச்சியை
எங்களோடு பகிர ;
அம்மாவுக்கு
அடிக்கடி உதவ ;
பாதுகாப்பாய்
நாங்கள் இருக்க ;
தன்னுள்
பாசத்தை பொத்தி
இறுக்கமாய் பார்த்த -
அவர் எங்கே...?

மனச்சுமை
இமைகளை
அழுத்த -
கன்னங்களில்
கண்ணீர் கோடுகள் !
எனது (மகளின்)
எழுதுகோல்
வழியாக - கண்ணீர்த்
துளி .... இறங்கி
எழுதிய தாளின்
முற்றுப் புள்ளி
மேல் நின்றது.

அவர் அமர்ந்த
நாற்காலி
மட்டும்
வெறுமையாய்...!

எழுதியவர் : சு.ஈ. பிரசாத் (23-Aug-15, 3:52 pm)
Tanglish : engae avar
பார்வை : 70

மேலே