மழலை சிரிப்பு

மாலை நேர கதிரவன் மேக கீற்றினுள்
நுழையும் நேரம் !.. வயது
வரம்பின்றி மானிடர் கூட்டம் அலை மோதுகிறது
அங்கே.... சீரும் அலையின் ஓதம்
நித்தம் அவை மண் மீது கொண்டுள்ள மோகம்!.
இக்காட்சி திரையினிலே நான்
என்னை மறக்கிறேன் ...
அந்த அழகான கடற்கரையிலே எனது
கேள்வி மிக ஆழமானது!......... அதோ
மாடி வீட்டு இளயராணி கோடி புரண்ட
காரியிலிருந்து கீலிறங்கி அன்னை
தந்தையின் ஆள்க்காட்டி விரலை ஆலமர
விழுதாக்கி சின்னதொரு ஊஞ்சல்
ஆடியபடி கடற்கரை நோக்கி வருகிறாள்!....
ஒ அவள் அணிந்த தலைபாகையின்
விலையோ என் மூன்று நாள் ஊதியம்
அத்தருணத்தில் நான் கண்டேன்
பிறை நிலவின் உதயம்!........
அழகான கன்னத்தில் அசிங்கமாய் ஒரு கரு 'மை'
பொட்டு :- அது தான் மின் வெட்டு
வெளிர் நிற உடையில் அந்த ஆறரை வயது
மழலை ஒரு தேவதை!..

" சிரிக்கிறாள் - வரையறுக்க முடியாத புன்னகை....
"கொஞ்சு தமிழ் பேசுகிறாள் - இலக்கணம் சொல்லி
தராத பெயர் சொல்
"சுற்றி பார்க்கிறாள் - முன்னுரை கொண்டு
வரையறுக்க முடியாத எழில் ஓவியம்...... இக்காட்சியய் காண்கையில் நினைவுக்கு
வருகிறது.....
"மழலை சிரிப்பின் மகத்துவம்
மருத்துவம் கண்டறியாத வைத்தியமென்று"!.....

"எழுதியவர் : dhamu (23-May-11, 4:41 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 836

மேலே