உப்பு டப்பா
மனைவி;- 'என்னங்க.. கிச்சன்லேர்ந்து..அந்த உப்பு டப்பாவை...எடுத்துகிட்டு வாங்க...!'
கணவன்;- 'எங்க..வச்சிருக்க.. காணோமே...?'
மனைவி;- 'உங்களால..என்ன செய்ய முடியும்...!
உங்க அம்மா உங்கள..எப்படித்தான் வளர்த்தாங்களோ..!
உருப்படியா..
ஒரு வேலை செய்ய..முடியுதா...?
உங்கள கட்டி வச்சு...எங்க வீட்டுக்காரங்க...
என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க...!
நீங்கல்லாம்..ஆபீஸில..பத்து பேரை எப்படி..
தான் கட்டி..மேய்கிறிங்க...?
இதுல மேனேஜர்'னு ஒரு பட்டம்..வேற..!!'
கணவன்;- 'இல்ல..நெஜமாவே காணாம்..!'
மனைவி;- 'உங்கள..நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க.. முடியுமா..?
உங்களால ஒரு வேலையும்.. உருப்படியா செய்ய முடியாது'னு தெரிஞ்சு..தான்
உப்பு டப்பா'வ நான் ஏற்கனவே...
இங்க கொண்டு வந்துட்டேன்...!!