ஒரு சிட்டிகை

ஒரு சிட்டிகை உப்பு
ஓரம்கட்டும் உணவினை ....

ஒரு சிட்டிகை விஷம்
முறிக்கும் மனித உயிரை ...

ஒருசிட்டிகை சுய நலம்
விரிசல்களை உருவாக்கும் உறவுகளில் ...

ஒரு சிட்டிகை தயிர்
உறைய வைக்கும் பாலை ...

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
குணமாக்கும் இருமலை ...

ஒரு சிட்டிகை கூடுதல் முயற்சி
ஏணியில் ஏற்றும் ....

ஒரு சிட்டிகை கவனம்
காயங்களை தவிர்க்கும்

ஒரு சிட்டிகை பாராட்டு
உயர வைக்கும் ஒரு மனிதனை

ஒரு சிட்டிகை அன்பு
வளர்க்கும் மனித உறவுகளை ..

ஒரு சிட்டிகை அன்பை
ஒவ்வொரு நாளும்
ஒரு சிட்டிகையாய் சேர்ப்போம்..

அன்பால் ஆல மரமாய்
தழைத்திடுவோம் ....

எழுதியவர் : கிருபா கணேஷ் (24-Aug-15, 10:43 pm)
Tanglish : oru chittigai
பார்வை : 92

மேலே