என்னை மறந்தது ஏன்
என் கனவினில் வந்தாய்
தூக்கம் தொலைத்தேன்!
என் நினைவினில் வந்தாய்
நிதானம் இழந்தேன்!
எப்போது என் எதிரில் வருவாய்
என எதிர்பாத்திருந்தேன்!
வந்தது உன்னிடமிருந்து
அந்த தொலைபேசி அழைப்பு!
நீதானா என நிதானிப்பதற்குள்
துண்டிக்கப்பட்டது அந்த இணைப்பு!
நீ துண்டித்தது தொலைபேசி இணைப்பை
மட்டும் அல்ல என்னையும்தான்