மனிதனும் மனிதமும்

..."" மனிதனும் மனிதமும் ""...

ஆயிரம் உறவுகளிருந்தும்
அருகாமையில் நீயிருக்க
அந்த ஆயிரமும் நீயானாய்,,,

தேசம்விட்டு வேறுதேசம்
நேசத்திற்காய் தவிக்க
பாசத்தால் இணைந்தோம்,,,

ஒன்றை பிரியும்போதுதான்
உண்மைகள் புலப்பட்டு
உறவுகளும் வலுப்படும்,,,

எங்கள் மனங்கள் பிடித்து
வாழ்வதால் எங்கள் மனதில்
மதங்கள் பிடிக்கவில்லை,,,

உணவருந்தும் வேளையில்
உள்ளன்போடு பிடித்ததை
ஊட்டி மகிழும் உவகை,,,

எனக்கு ஒன்றென்றால்
முன்னுக்கு நிற்பதும் முதல்
சொட்டு கண்ணீரும் அவனே,,,

நாடுவிட்டு வந்தால்த்தான்
இந்த நட்பின் நாட்டமா
எடுத்துச்செல்வோம் நம்மோடு ,,,

உறக்கச்சொல்வோம் உலகிற்கு
நாமின்று மனிதனாகினோம் வா
மற்றவரையும் மனிதராக்குவோம்,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-Aug-15, 5:45 pm)
பார்வை : 64

மேலே