சத்தம்

என்ன சலசலப்பு ...,
உன் கால் கொலுசு ..,

என்ன முனுமுனுப்பு ..,
உன் கை வளையல்கள் ..,

என்ன கிசுகிசு ..,
உன் காதோர கம்மல் ..,

உருண்டோடும் நதி ..,
உன் இதழோர சிரிப்பு ..,

விரைந்தோடும் இரயில் ..,
உன் விழி ஆடும் நடனம் ..,

மிதக்கும் கப்பல் ...,
உன் கருங்கூந்தல் ..,

பறக்கும் விமானம் ..,
உன் பளிங்குபாதம் ..,

இவை எழுப்பும் ..,
சத்தம் நீதான் என்...,
அன்பே ....!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (28-Aug-15, 2:40 am)
Tanglish : sattham
பார்வை : 214

மேலே