மனசுக்குள்ளே ஒரு மழைக்காலம்..
இருண்டிருந்தது வானம்…
அதட்டிய குழந்தை
அழுவதுமாதிரி
”சட்”டென பெய்ய
ஆரம்பித்தது
மழை
குடைக்குள்
ஒற்றையாய்
நடக்கிறோம்
நாம்...
நாம்
நனைந்ததில்
மழை
தன்னை
நனைத்துக்கொண்டது....
ஆடைகளை
சரிசெய்துகொண்டே
நீ...
ஆசைகளை
சரிசெய்துகொண்டே
நான்..
”யாராவது பார்த்துவிடப்போகிறார்கள்”
அப்பாவின்
பயத்தில் நீ
“எல்லோரும்தான் பார்க்கட்டுமே”
அம்மாவின்
தைரியத்தில்
நான்...
தவளைகளுக்கு
வெட்கமில்லை...
தெரிந்துவிட்டதாய்
சத்தமிட்டுக்கொண்டிருக்கின்றன
நம் அண்டைவீட்டாரைப்போல..
வெளியில்
நின்றுவிட்டது மழை
இனி உள்ளே.....
குடை தலையாட்டிக்கொள்கிறது
புரிந்துவிட்டதைப்போல......