லஞ்ச தந்திரம்

ஏய்யா நம்ம ஆபிஸலே வேலை செய்யற நம்ம எல்லாருக்கும் நாம எதிர்பாக்கறதுக்கும் அதிகமா லஞ்சம் கெடைக்குது. நாம ஏ லஞ்சம் வாங்குவோர் சங்கம்னு ஒரு சங்கத்தை ஆரம்பிக்கக்கூடாது.

யோவ் அப்படி ஒரு சங்கத்தை ஆரம்பிச்சா நமக்கு கேவலமா போயிடும். அந்த சஙகத்து அரசு தடை போடும்.கையூட்டுப் பெறுவோர் நலச் சங்கமனு ஆரம்பிக்க முடியாது. ..ம்ம். என்ன செய்யலாம்.

யோவ் மொதல்ல எந்தெநதத் துறை அலுவலகங்கள்ல லஞ்சம் அதிகமா கெடைக்குதுங்கற வெவரத்த தெரிஞ்சிகிட்டு நாமெல்லாம் கூட்டாச் சேர்ந்து கடமை தவறாத அலுவலர் நலக் கூட்டைப்புன்னு ஆரம்பிக்கலாம். லஞ்சம் வாங்கற யாருக்காவது ஏதாவது பிரச்சனைன்னா பாதிக்கப்பட்ட லஞ்சருக்கு நம்ம கூட்டமைப்பு உதவி செய்யும்.

நல்ல யோசனை. கடமை தவறாதன்னா லஞ்சம் வாங்கறன்னு மக்கள் புரிஞ்சுக்குவாங்க.

எழுதியவர் : மலர் (1-Sep-15, 10:37 pm)
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே