காதல் 2

அதிகாலையில் நீ
சூரியனானால் நான் தாமரையாகிறேன்
என் முகம் பார்த்து
நீ சிந்தும் புன்னைகைக்காக
நாள் முழுவதும் தவம் செய்கிறேன்
நீ புன்னைகைத்த நொடியில்
புது ஜனனம் பெறுகிறேன்
உச்சி பொழுதில்
உன் கோபமான கதிர்களால்
நான் வாடி போகிறேன்
அந்தி பொழுதில்
குளிர் நிலவாய் வீசினால்
அல்லி பூவாக மலர்கிறேன்
உன் காலடி தொடர்ந்து வந்த நாள் முதல்
கண்ணாடியாக உன்னை
பிரதிபலித்து கொண்டே இருக்கிறேன்

எழுதியவர் : கவின் மலர் (4-Sep-15, 4:30 pm)
பார்வை : 73

மேலே