இளைஞ்சனே உன்னால் முடியாது என எதுவும் இல்லை நீ முயலாத வரை - உதயா

இந்து , முஸ்லீம் , கிறிஸ்டின் , திருநங்கை என அனைத்து பாலினத்தரும் , மதத்தினரும் வாழ்ந்து வரும் இடம் தான் ஐஸ்வர்யம் நகர். இந்நகரில் இந்து இந்துகளிடமும் , முஸ்லீம் முஸ்லீமிடமும் , கிறிஸ்டின் கிறிஸ்டினுடனும் மட்டும் பழக்க வழக்கங்களையும் நட்பினையும் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் மற்ற மதத்தினருடன் நட்புக்கொள்ளவேயில்லை. அதற்கான காரணத்தை என்னால் அறியவும் முடியவில்லை

அதே நகரில் கண்ணன் என்ற கல்லூரி மாணவனும் வாழ்ந்து வருகிறான். அவன் நீண்ட நாட்களாக ஐஸ்வர்யம் நகர் முழுவதும் மரக்கன்றுகளை நடவள் செய்யவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தான் .
ஒருவழியாக எதோ ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து சுமார் 250 மரக்கன்றுகளையும் கடந்த சனிக்கிழமை அன்று இறக்குமதியும் செய்துவிட்டான் .

அனைத்து மரக்கன்றுகளையும் தனி ஒருவனாய் நடவள் செய்வது மிக கடினமான காரியம். இருப்பினும் கண்ணன் யாரையும் அழைக்காமல் மறுநாள் ஞாயிறு அன்று காலையில் கடப்பாரை மண்வெட்டியினை எடுத்துக்கொண்டு மரக்கன்று நடவள் செய்ய ஒரு குழியினை தோண்டி ஒரு மரக்கன்றினை நடவுளும் செய்துவிட்டான். அடுத்த மரக்கன்றினை நடவள் செய்ய குழி தோண்ட முற்பட்டபோது

" கண்ணா ... அண்ணா ... " என ஒரு கூட்டு குரல் ஓசை ஒலித்தது .

இந்து , முஸ்லீம் . கிறிஸ்டின் என அந்த நகரைச் சேர்ந்த அனைத்து மதத்தின் பள்ளிச் சிறுவர்களும் , கல்லூரி பயில்வோரும் , இளைஞ்சரும் வருகை தந்திருந்தனர் .ஒவ்வொருவரும் தானாக பணிகளை பிரித்துக்கொண்டு பணியினை தொடங்கினர் .

" டேய் பாலா , அலெக்ஸ் சீக்கிரம் குழி தோண்டுகடா .. "

" வெஸ்லி அண்ணா பாத்து பொறுமையா செடிய நடுங்க "

" டேய் தீபக் , இம்ரான் வேகமா செடிய எடுத்துனு வாங்க பா "

" கணேசா , ஜெகனு , முஷித் என்னடா தம்பி கொஞ்சம் வேகமா தண்ணிய எடுத்துனு வாங்கடா "

என அவர்களின் உரையாடலும் செயல்பாடும் அனைத்து மதத்தின் பெரியவர்களையும் நீண்ட நேரம் வேடிக்கைப் பார்க்க வைத்தது . ஒரு கணம் வெட்கப்பட வைத்தது .

அதே நகரில் வசிக்கும் திருநங்கைகளின் கோவிலுக்கு அவர்கள் விருந்து சுவைக்கச் சென்று

" அக்கா எனக்கு சாம்பார் ஊத்துங்க , அத்தை எனக்கு சாப்பாடு வைங்க "

என அவர்களின் அன்பு நிறைந்த பரந்த மனதின் வார்த்தைகள் , அங்கு சுற்றி நிறைந்திருந்த திருநங்கைகளின் கண்களில் வற்றா ஊற்றினை சுரக்க வைத்துவிட்டது

அவர்களின் செய்பாடு நடவள் செய்த மரங்கள் வளர வளர அதில் ஒற்றுமையை கனியாக பிறக்க வைத்தது . அவர்கள் சாதி , மதம் , இனம் கடந்து சாதாரண மனிதர்களாய் மனிதம் போற்றி வாழ்ந்துகொண்டே நாளும் நல் நாளாய் நாட்களை கழிக்கின்றனர் .

******** ( இளைஞ்சர்களே உம்மால் முடியாதது என எவையும் இல்லை , நீங்கள் முயன்று பார்க்காதவரை ) ************

- உதயா

எழுதியவர் : உதயா (4-Sep-15, 11:00 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 239

மேலே