நாங்கள் தமிழர்கள்

ஒவ்வொரு
நடிகருக்கும்
மணிமண்டபம் கட்டுவோம் !

ஒவ்வொரு
நடிகைக்கும்
கோயில் கட்டுவோம் !!

நாங்கள் மட்டும்,
ஓலைக்குடிசையில்
குடியிருப்போம்....

நியாய விலைக் கடை
அரிசியில்
உயிர் வாழ்வோம்...

கந்தலைக்
கசக்கிக்
கட்டுவோம்...

ஆசிரியர்
இல்லா பள்ளியில்
படிப்போம்...

மருத்துவரில்லா...
அரசு
மருத்துவமனையில்
வைத்தியம் பார்ப்போம்...

இறந்த பிறகாவது,
எங்கள்
உடலை
நிழலில் கிடத்த
சுடுகாட்டுக்கு
கூரை வேய்ந்தார்களே....
நன்றி !

எழுதியவர் : ஆ. க. முருகன் (7-Sep-15, 10:06 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 621

மேலே