ஆசையின் வெகுமதி

   ஆசையின் வெகுமதி

ஒரு விறகு வெட்டியொருவன் இருந்தான்.ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடரி காணாமல் போனது.
கடவுளே! என்று உரக்கக் கத்தினான்.என் குடும்பத்தைக் காப்பாற்று.! ..என் கோடரியை கண்டுபிடித்துத் தா என்று அழுது வணங்கினான்.
கடவுள் திடீரென தோன்றி உதவுகிறென் என்றார்.பின்னர் தன் சக்தியால் தங்க உலோக கோடரியை வரவைத்து இது உன்னுடையதா? என்று கேட்டார்.விறகு வெட்டி இது இல்லை சாமி என்றான்.
கடவுள் பின்னர் வெள்ளி உலோக கோடரியை வரவைத்து இதுவா?என்று கேட்டார். இல்லை சாமி என்றான்.பின்னர் அவனது தொலைந்த கோடரியை வரவைத்து இதுவா? என்று கேட்டார் கடவுள். ஆமாம் சாமி என்றான்.
கடவுள் இவனது பண்பை பாராட்டி அவனிடம் நீ உன்மையை கூறியதால் உனக்கு மூன்று கோடரியையும் தருகிறென் என்று மூன்றையும் கொடுத்தார்.
நடந்ததை தன்  மனைவியிடம் கூறினான். பேராசை பிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம் அழைத்து செல்ல கெஞ்சினாள்.அவனும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது காணாமல் போனாள்.
கடவுளே! என்று கத்தினான் விறகு வெட்டி.என் மனைவியை கண்டுபிடித்துத் தா என்று கெஞ்சினான்.
கடவுள் அவன் முன் தோன்றி., உனக்கு உதவுகிறேன் என்றார்.அவர் தமது சக்தியால் சமந்தாவை வரவைத்து,இது உன் மனைவியா? என்று கேட்டார்.
அவன் ஆமாம் சாமி என்றான். உடனே கடவுள் திகைத்து, என்னப்பா? உன் நேர்மை? ஏன் பொய் சொல்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன், சாமி நீங்கள் முதலில் சமந்தாவை காட்டி இதுவா? உன் மனைவி என்பீர்..நான் இல்லை சாமி என்பேன்.பிறகு தமன்னாவை காட்டி இதுவா? உன் மனைவி என்று கேட்பீர்..நான் இல்லை சாமி என்பேன்.அடுத்து என் உண்மையான மனைவியை காட்டி இதுவா உன் மனைவி என்பீர்..நான் ஆம் என்பேன்.
நீ உண்மை சொன்னதால் மூன்று பேரையும் வைத்துக் கொள்ள சொல்வீர்..நானோ! விறகு வெட்டி எப்படி சாமி மூன்று பேரையும் வைத்து வாழுரது அதான்.
கடவுள் திகைத்து விட்டு மறைந்தார்.

எழுதியவர் : (9-Sep-15, 5:04 pm)
Tanglish : aasaiyin vegumathi
பார்வை : 297

மேலே