என்மனம் துள்ளுமே இன்முகப் பெண்களைக் கண்டு - நேரிசை வெண்பா

இரு விகற்ப நேரிசை வெண்பா

வெண்ணிலா வானிலே வந்திடும் போழ்திலே
எண்ணிலா மின்மினி கண்ணிலே - கண்டதும்
என்மனம் துள்ளுமே மண்ணிலே என்றுமே
இன்முகப் பெண்களைக் கண்டு!

ஆதாரம்: கீழேயுள்ள வெங்கடாசலம் தர்மராஜன் அவர்களின் வெண்டுறை:

வெண்ணிலா வானிலே வந்திடும் போழ்திலே
எண்ணிலா மின்மினி கண்ணிலே கண்டதும்
என்மனம் துள்ளுமே மண்ணிலே என்றுமே
பெண்களின் இன்முகம் கண்டதும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-15, 8:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46
மேலே