இவள் இனம்

மானினம் விழிகள்
முகிலினம் கூந்தல்
தேனினம் இதழ்கள்
பூவினம் புன்னகை
தாமரை தாங்கும்
கொடியினம் இடை
மேனி எழிலோ
பாலினம்
வல்லினம் அறியா
மெல்லினமே
உன் சொல்லினம் தமிழ்
நான் சொல்லும் கவியினம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-15, 10:11 am)
Tanglish : ival inam
பார்வை : 68

மேலே