கரை நின்று கவனி
நட்பே !
காரணமின்றி இங்கோர் காரியமும் இல்லை .
சோதனைகள்
நம்மைச் செதுக்கும் உளியே அன்றி
நொறுக்கும் சம்மட்டி அல்ல!.
சுழல் வரும்போது
மூழ்கி விடாமல்
கரைநின்று கவனி ..
கற்றுகொள் ..
திடமாவாய் ..வளர்வாய்
பின் நீ தேடாத வெற்றி கூட
நாடி வரும் ...அப்போதும் மூழ்காமல்
கவனி ...கற்றுக்கொள் ...
பயணம் இனிதாகும் !