தமிழ் இலக்கணம் - தொடர்பு பன்னிரண்டாம் நூற்றாண்டு

தமிழில் ஐவகை இலக்கணங்களான
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும்.

காவியதர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார்.

இது உரைதருநூல்களில் ஒன்று.

இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார்.

தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் (1133-1150) பன்னிரண்டாம் நூற்றாண்டு.

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 8:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 232

சிறந்த கட்டுரைகள்

மேலே