தமிழில் முடியுமே

மேற்குத்திசையில் மெத்த வளரும் கலைகள் அனைத்தும் தமிழிலும் அமைதல் வேண்டும் என விழைந்தான் மகாகவி .
அதற்கு முதலில் வேண்டிய 'ஆயுதம்' புதிய ஆங்கிலச் சொல்லுக்கு நிகர்த்த தமிழ்ச் சொல் !

ஓர் நாளிதழில் அதற்கான முயற்சி தொடர்கிறது - அதிலிருந்து சில ...

இப்படிப் பல ஆண்டுகளாக வாசகர்களோடு ஒரு மிகப்பெரிய சொல் விளையாட்டை, இல்லை சொல் வேட்டையை நடத்தி பார்பரா வால்ராஃப் ஆங்கில மொழிக்குப் பல்வேறு சொற்களையும், சொற்றொடர்களையும் சேர்த்துப் பெருமை கொண்டார். வெறும் மொழியியல் வல்லுநர்களையும், இலக்கணத்தில் கரை கண்ட பேராசிரியர்களையும் இணைத்துக்கொண்டு அவர் சொல் வேட்டையை நடத்தவில்லை. மாறாக, தன் பத்திரிகையின் மூலம், சராசரி வாசகர்களைத் தன் பக்கம் ஈர்த்து, அவர்கள் மூலமாகவே இந்தச் சொல் அரங்கத்தை பார்பரா நிகழ்த்தினார்.

அதனால் விளைந்த பயன் இரண்டு. ஒன்று, சராசரி மனிதனுக்கு அச்சொற்கள் அந்நியப்பட்டுப் போகாமல் பழக்கமாயின. இரண்டாவது, சாமானியர்களின் ஒப்புதலோடு புதுச்சொற்கள் அரங்கேறின. எனவே, தமிழ்மொழிக்கும் தேவை ஒரு பார்பரா வால்ராஃப்.

அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும்? நுட்பமான பொருள் பேதங்களும் அவைகளுக்குத் தகுந்த மொழிகளும் (வார்த்தைகளும்) நடையும் ஒரு பாஷையில் எவ்வாறு தோன்றும்? தோன்றியவை எவ்வாறு உயிருடன் நிற்கும்? பொருளைப் புகுத்திப் பேசிப் பழகி வந்தால் தானே பாஷை வளம் பெறும்?

கிடைத்த புல்லையும் தவிட்டையும் ஆங்கில மாட்டுக்கே போட்டு வந்தால், நம்முடைய பசு எவ்வாறு பால் கொடுக்கும்? கொஞ்சம் தடை தோன்றிய இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தைப் போட்டு நிரவிப் பேச்சை ஓட்டிக் கொண்டு போனால், தமிழ் எங்ஙனம் வளரும்? அறிஞர்களெல்லாம் தமிழைக் கொல்லுவதற்காகச் சதியாலோசனை செய்தால்கூட இதைவிட வேறு யுக்தி கண்டுபிடிக்க முடியாது!'' என்பதுதான் மூதறிஞர் ராஜாஜி வெளியிட்டிருந்த கருத்து.

ராஜாஜியின் கருத்தில் பாஷை, தேசம் போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகள் கலந்திருக்கின்றனவே என்று கேட்கலாம். அன்றைய பேச்சு வழக்கு அப்படி இருந்தது. இன்று அந்த வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகள் கையாளப்படுகின்றன என்பதும் நல்ல மாற்றம்தானே? அதே நேரத்தில், ராஜாஜி பேசும்போது முடிந்தவரை அதில் ஆங்கில வார்த்தைக் கலப்பு தவிர்க்கப்படுவதை நாம் காண முடிகிறது.

phobia - வெருட்சி , வெருளி
addict - மீளாவேட்கை
tension - மனக்கொதிப்பு
paranoid - மனப்பிறழ்வு
objective - புறத்தாய்வு
subjective - அகத்தாய்வு
input - உள்ளீடு
output - வெளீயீடு


acronym - தொகுசொல்
allusion - மறை பொருள்

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 8:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 409

மேலே