கணினிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் சில

சில கணினிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

தமிழுக்கு தொண்டு செய்த முக்கியமான சிலரில் ஒருவரென நான் கருதும் மணவை முஸ்தபா அவர்கள் இதற்கென ஒரு பெரிய நூலையே வெளியிட்டுள்ளார் ... அதனையும் பார்த்துக் கொள்தல் நலம் ...

key in - உள்ளிடு
computer - கணிப்பொறி, கணினி
computer science - கணிப்பொறியியல்
computerize - கணினிமயமாக்கு
save - சேமி
memory unit - நினைவகம்
Central Processing Unit - மையச் செயலகம்
central processor - மையச் செயலி
software - மென்பொருள்
keyboard - விசைப்பலகை
control key - கட்டுப்பாட்டு விசை
control panel - கட்டுப்பாட்டகம்
program - கட்டளைநிரல்
backspace - பின்நகர்வு
cursor - சுட்டி

பி.கு : இதில்கூட key in - க்கு உள்ளீடு என தரப்பட்டுள்ளது ; input - க்கு ...??
அடுத்து cursor ; பொதுவாக link தான் சுட்டி எனச் சொல்லப்படுவது ;
cursor - க்கு , ' காட்டி ' அல்லது ' நகர் சுட்டி ' என்றோ சொல்லலாமா..!?
இதைப் பதித்தவுடன் எனக்கு தோன்றியது , link - கிற்கு ' இணைப்பி ' எனச் சொல்லாமா என ...

beta - அறிமுகப் பதிப்பு
chip - சில்லு
font - எழுத்துரு
character map - எழுத்துரு வரைபடம்
computer language - கணினி நிரல்மொழி
computer user - கணினிப் பயனர்
touchscreen - தொடுதிரை
touchscreen computer - தொடுதிரைக் கணினி
laptop - மடிக்கணினி
desktop computer - மேசைக் கணினி
shut down - (கணிப்பொறியை) நிறுத்து, அணை
driver - இயக்கி
screen - திரை
key - விசை, பித்தான்
click - சொடுக்கு, அழுத்து
file - கோப்பு
open - திற
close - மூடு
minimize - சுருக்கு , சிறிதாக்கு
maximize - பெரிதாக்கு , மீப்பெருக்கு
install - உள்நிறுவு

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 10:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 520

சிறந்த கட்டுரைகள்

மேலே