FUN நாட்டு முதலீடு

முதலீடு -
இரண்டு நாளாக பேஸ்புக்கில் கலாய்க்கப்படுவது -

தமிழ்நாட்டுக்கு இரண்டரை லட்சம் கோடி முதலீடு வரப்போகிறது என்பதான பில்டப் 15 மாதங்களுக்குள் 26 நாடுகளைச் சுற்றி வந்த மோடி திரட்டியதே ஒரு லட்சத்து 89 ஆயிரம் கோடிதான் என்று ஒரு செய்தி கூறுகிறது.

விஷயம் என்னவென்றால், இரண்டுமே பில்டப்புகள்தான். இதுபோன்று ஒப்பந்தங்கள் போடுகிற, முதல்வரோடு படம் எடுத்துக்கொண்டு பிரஸ் ரிலீஸ் செய்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிற பேஸ்புக் நண்பர் இங்கேயே இருக்கிறார்.

இதுபோன்ற பயணங்களிலோ மாநாடுகளிலோ அறிவிக்கப்படுகிற அல்லது கையெழுத்தாகிற ஒப்பந்தங்கள் எல்லாமே நிறைவேறியது அல்லது நிறைவேற்றப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

நிறைவேறியதா என்று யாரும் தொடர்ந்து பார்க்கப்போவதும் கிடையாது. அதனாலேயே எல்லாருக்கும் வசதியாகி விடுகிறது.

அந்தந்தக் கட்சியின் பக்தர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி தரக்கூடும். அதற்கு மேலே ஏதுமில்லை. அப்படியே வருகிற அன்னிய முதலீடுகளாலும் பெரிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது.

உதாரணம் - ஹுண்டாய். வந்ததும்கூட நிலைக்கும் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. உதாரணம் - நோக்கியா. நிலைத்தாலும் அவர்களால் அரசுக்கு வருவாய் உத்தரவாதம் கிடையாது. உதாரணம் - வோடஃபோன்.

மிக அண்மையில் அமெரிக்கர் ஒருவர் 16,000 கோடி முதலீடு செய்ததை பின்வாங்கிக்கொண்டார் என்ற செய்தி மூன்று நாட்கள் முன் வந்தது. அதை யாரும் பார்த்தது போலத் தெரியவில்லை.

முதலீடுன்னா இட்டிலிப் பாத்திரத்துல ஊத்தற முதல் ஈடு. இது நான் சொன்னதில்லே, நான் சொன்னது. அதுதான் நமக்கு முக்கியம். அதுக்கு வழியப் பாருங்க.

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (12-Sep-15, 9:50 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே