மனதில் ஒரு சஞ்சலம்

பூத்து குலுங்கிய ....
மலர்களை பறித்து ....
பூமாலை சூடினேன் ....
என்னவனுக்கு .....!!!

மனதில் ஒரு சஞ்சலம் ....
என்னவன் மாலையுடன் ....
செல்கையில் எவளோ ....
ஒருத்தி கண்ணில் படுவாரே ....
கோபம் கொள்கிறேன் மனமே
+
குறள் 1313
+
புலவி நுணுக்கம்
+
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 233

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Sep-15, 12:27 pm)
பார்வை : 57

மேலே