மெளனங்களின் மொழி

என்னால் திருடப்பட்ட
இதயமொன்று
என்னுள்ளில்
இருந்துவிடத் துடிக்கிறது...

என்னுடனான யாத்திரைக்கு
எத்தனிக்கும் அவ்விதயம்
எனக்குள்ளே இருக்கும்
மெளனங்களுடன் பேசத் துவங்கும்...

உன் மீதான
எனது உணர்வுகளின்
ஒற்றைச் சொல்லினைக் கூறும்
என் கண்களின் மொழி...

என் கண்கள் பேசுகின்ற
மொழியினை புரியாதது போல்
நடிக்கின்ற உன் இதயத்தில்
மெளனங்களின் மொழி...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (13-Sep-15, 7:20 am)
பார்வை : 265

மேலே