சர்பானின் வரிகள் வெண்பா வடிவில்

நிலா நீ உலா செல்லாதே!
மானுக்கு வலை விரிக்கும் வேடன்
வானுக்கு வலை போட்டு விடுவான்
---நிலா என்ற அவர் கவிதையின் கடைசி வரிகள்
முதலில் எல்லா வரிகளையும் நான்கு சொற்களால் அமைக்கிறேன்

நிலாநீ வானில் உலாவிடச் செல்லாதே
நிரை/நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர் (மா முன் நேர். நிரை அமை).
புளிமா தேமா கருவிளம் தேமாங்காய்

மானுக்கு வலை விரிக்கும் வேடன் (வலை ஓரசை ; மாற்று )
நேர் நேர் நேர் நிரை நிரைநேர் நேர் நேர்
தேமாங்காய் ...................புளிமா தேமா (மா முன் நேர். மாற்று )

வானுக்கு வலை போட்டு விடுவான்
---முதல் இரண்டடியை தளை தட்டாமல் செப்பனிடுவோம்
நிலாவேநீ வானில் உலாவிடச் செல்லாதே
நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர்
புளிமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
காய் முன் நேர் மா முன் நிரை விளம் முன் நேர் . சரி தளை தட்டவில்லை.

மானுக் குவலை விரித்திடும் வேடனோ
நேர் நேர் நிரை நேர் நிரை நிரை நேர் நிரை
தேமா புளிமா கரு விளம் கூவிளம்
முந்தய அடி காய் முன் நேர் மா முன் நிரை விளம் முன் நேர் ----விதி சரி

ஈற்றடி மூன்று சீர்களாலும் ஈற்றுச் சீர் ஓரசையிலும் அமைய வேண்டும்
அமைப்போம்
வானுக் குமேவிரிப் பான்
நேர் நேர் நிரை நிரை நேர்
தேமா கருவிளம் . நாள் என்பது போல்

நிலாவேநீ வானில் உலாவிடச் செல்லாதே
மானுக் குவலை விரித்திடும் வேடனோ
வானுக் குமேவிரிப் பான்

மூன்றடிகள் கொண்டதால் இது இன்னிசை சிந்தியல் வெண்பா எனப்படும்

யாப்பு ஆர்வலர்களுக்கு பயன் தரும் . வாழ்த்துக்கள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-15, 5:32 pm)
பார்வை : 100

மேலே