ஆங்கிலம் அரைகுறை தமிழில் பூஜ்ஜியம்

தினமும் 50 பேரையாவது டீல் செய்ய வேண்டிய பதவியில் ஒரு பிஹாரி அதிகாரி இருக்கிறார். ஆங்கிலம் அரைகுறை. தமிழில் பூஜ்ஜியம் . ஆனால் தமிழகத்தில்தான் பணி. இன்னும் 15 வருடங்களுக்கு ஊர் பக்கம் டிரான்ஸ்ஃபர் என்ற பேச்சிற்கே இடமில்லை. மற்றபடி உண்பது உறங்குவது முயங்குவது எல்லாம் இந்தியில்தான்.

இவரிடம் சேவை பெற்றாக வேண்டாகிய ஐம்பது பேரும் ரத்தம் கக்கி சாகின்றனர் தினமும். ஏங்க கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டா என்னங்க ? இல்ல இங்லீஷ்லையாவது பேசுங்க என்று சக அலுவலர்கள் கூறினாலும் "இந்தி ராஜ்பாஷா .. அஃபிஷியல் லேங்குவேஜ் .. " என்பார்.

போக சம்பாஷைனைகள் புரியாமல் குளறுபடிகள் ஏற்படும் போது " சாலா .. பெஹென்சோத் " என்று வசவுகளை வேறு முனுமுனுப்பார். தூத்துக்குடி ஆட்களைப் பற்றி இன்னமும் தெரியவில்லை . முன்னால் நிற்பவருக்கு அர்த்தம் புரிகிற அன்றைக்கு அன்னார் தலைப்புச் செய்தியில் வருவதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது.

"அரசு சேவைப் பணிக்காக ஒரு மாநிலத்தில் நிரந்தரமாகப் பணியமர்த்தப்படும் ஊழியர் அந்த மாநில மக்கள் பேசும் மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது அவர் ஒருவருக்காக அந்த மாநில மக்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா? " என்று கேட்கிறார் குமார்.

எழுதியவர் : முகநூலில் - படித்தது பகிர் (14-Sep-15, 12:19 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 113

மேலே