ஏன் அழ வேண்டும்

ஏன் அழ வேண்டும்?

ஞானி சுவான்சுவின் மனைவி இறந்துவிட்டார்.அவருடைய நண்பர் ஹு சு துக்கம் விசாரிக்க வந்தார்.அப்போது சுவான்சு மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடிக் கொண்டிருந்தார்.ஒரு பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தாளம் வேறு!ஹு சுவுக்கு இக்காட்சியைப் பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது.''என்ன அவமானம்?என்ன இருந்தாலும் அவள் உன் மனைவி.வாழ்நாள் முழுவதும் உனக்காக வாழ்ந்தவள்.

.உனக்கு அழுகை வரவில்லைஎன்றால் அது ரொம்பக் கேவலமாகத் தெரிகிறது.நீ பாட்டுக்கு ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறாயே.இது உனக்கே நன்றாக இருக்கிறதா?''என்று சுவான்சுவைப் பார்த்துக் கேட்டார். சுவான்சு சிரித்துக் கொண்டே சொன்னார்,''என் அன்பிற்குரிய மனைவி இறந்தவுடன் எனக்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது.விழிகளில் கண்ணீர் கரை புரண்டு வந்தது.ஆனால் உடனே எனக்கு ஒரு உண்மை ஞாபகம் வந்தது.இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணம் அடைவது தவிர்க்க இயலாதது.இது இயற்கையின் மகத்தான நியதி.என் பாச மனைவி தற்போது இந்த வாழ்விலிருந்து ஓய்வெடுத்துத் தூங்குகிறாள்.

அவள் என் வருகைக்காக அமைதியாகக் காத்திருக்கிறாள். நான் ஏன் கதறிக்கொண்டும் அழுது கொண்டும் ஆர்ப்பாட்டம் செய்தும் அவள் அமைதியை கெடுக்க வேண்டும்?நான் அப்படி செய்தால் எனக்கு இயற்கையின் உன்னத நியதிகள் எதுவும் தெரியாது என்று பொருள்.''

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (14-Sep-15, 9:06 pm)
Tanglish : aen AZHA vENtum
பார்வை : 453

மேலே