ஹலோ
அறிமுக வார்த்தை
அர்த்தம் பதிந்த வார்த்தை
வலிமையான வார்த்தை
நட்பை வளர்க்கும் வார்த்தை
உரிமையான வார்த்தை
உணர்வு பூர்வமான வார்த்தை
அவசர உலகில்
அவசர ஹலோவிற்கும்
ஆயுள் அதிகம் !
தொலைபேசியின்
இணைப்பு நாயகன்
தொலை தூரத்தில்
இருப்பவர்களை இணைக்கும் நாயகன்
ஒரு எளிமையான ஹலோ
ஓராயிரம்
விஷயங்களை
நமக்கு கற்று தரும் .....
ஹலோவில் உலகம்
நம் கையில்.
------------------------------------
...கிருபா கணேஷ் .....