வென்றவன் அறிவான்

இயன்றவனுக்கு இன்று இனிதாகும்
இயலாதவனுக்கு என்றுமே கசப்பாகும்..
இக்கரைக்கு அக்கரை பச்சை செயல் உலோபிக்கு
இக்கரையும் அக்கரையும் பச்சை பயிற்சி எடுப்பவனுக்கு..
முடிந்தவரை முயல்பவன் முதலாவதாக நிப்பான்
மூச்சு முட்ட திண்டு முடியாதென்பவன் முட்டாள் ஆகிப்போவான்..
முன்னேற முதல் மட்டும் போதாது முயற்சியும் வேண்டும்.
வென்றவன் அறிவான் இது அவ்வளவும் அவன் வாழ்க்கை என்று.