வாராய் வண்ணத்துப் பூச்சியே

வண்ண வண்ண பட்டாம்பூச்சி வாராய் நீயே.
அருகில் வந்து என்மீது அமர்வாய் நீயே.
தொட்டுமட்டும் நான் பார்ப்பேன் நம்பு நீயே
இறகைச்சிதைக்க எண்ணமாட்டேன் வாராய் நீயே

வண்ணமான இறகை அசைத்து எங்கே போகிறாய்
உருண்டைக்கண்ணை உருட்டி அங்கு யாரைப் பார்க்கிறாய்
தனித்து நீயும் சோலை வர பயமாய் இலலையா?
காடு மலை சுற்றுவதால் களைப்பு இல்லையா?

எங்கள் வீட்டில் தேனைத்தரும் மலர்களுண்டு.
அதைக்குடித்துவிட்டு களைப்பாற மரங்களும் உண்டு.
வெயில் மழைக்குத் துன்பப் படும் பட்டாம்பூச்சியே..
என் கட்டில் மெத்தை போர்வையுண்டு வந்திடு நீயே..!.

அன்னை தந்தை யாவருக்கும் சொல்லிவிடு…
தினம் தினமும் மாலை நேரம் இங்கே வந்திடு…
புட்டி நிறைய தேன் தருவேன் நீ குடிக்கலாம்
களைப்பு தீர விளையாடி நாம் மகிழலாம்….!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (16-Sep-15, 2:51 pm)
பார்வை : 84

மேலே