இன்பக் கனாப்போல தோன்றவில்லை அற்புதமாய் - இரு விகற்ப நேரிசை வெண்பா

அவன்என்னைக் காதலிப்பான் என்றெண்ணி னேன்நான்;
அவன்எந்தன் வாயி லளித்தான் – நவமுத்தம்;
நோய்ப்பட்ட ஓர்பறவை யானேன்;தெற் கேசெல்லும்
வாய்ப்பில் நிலையிலே நான்! 1

நவம் – புதிதாய், முதன்முதலாய்

வாய்ப்பில் – வாய்ப்பு + இல்லா

என்னையவன் காதலிக்கின் றான்என் றறிந்தாலும்
இன்றிரவு துக்கத்தில் என்னிதயம்! – நன்றாக
நான்கண்ட இன்பக் கனாப்போல அம்முத்தம்
தோன்றவில்லை அற்புதமாய்த் தான்! 2

Ref: The Kiss - Poem by Sara Teasdale.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-15, 10:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 107

மேலே