இந்திய பொருளாதார வளர்ச்சி வலியவர் வாழ எளியவர் வீழ

இதுதான் நம் தேசம்"

👉
சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

👉
பணக்கார பங்களாக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

👉
சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை.....

👉
ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

👉
சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷசம்பளம்...

👉
ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோக ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

👉
சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

👉
சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

👉
சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

👉
நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

👉
பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

👉
கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்..கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்......

எழுதியவர் : செல்வமணி (18-Sep-15, 9:35 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 553

சிறந்த கட்டுரைகள்

மேலே