காதலும் காமமும் ஒன்று தான்

காதல் என்பது சினிமாவினால் பாலிஷ் செய்யப்பட்ட காமம் !

தமிழன் ஒழுங்காக, தான் உணர்ந்ததை தான் சங்க அகப்பாடல்களாக எழுதி வைத்தான்.

" .................................................. சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

- குறுந்தொகை

போலித்தனம் அதிகரிக்க அதிகரிக்க காதல் என்ற பயன்பாடு வழக்கில் அதிகமாயின. காலப்போக்கில், காமம் கலக்காத அன்பு என்பன கற்பிதங்களாயின.
சங்க இலக்கியத்திலிருந்து பக்திபாடல் காலம் வரை காமம் தான் பேசப்பட்டது ! காதல் அல்ல ! கடவுள் மேலும் பெருங்காமம் கொண்டதாக பாடல்கள் உண்டு !

தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு காமம் கெட்ட வார்த்தையல்ல. அது பேரன்பு உடலாலும் இணையும் அன்பு.

காதலும் காமமும் ஒன்று தான் !

காமத்தையும் வெறும் பாலின கவர்ச்சியையும் ( lust ) ஒப்பிடுகின்றனர்.

காமம் கலக்கவில்லை எனில் அந்த உறவை அன்பு, நேசம், சிநேகம் என்று சொல்லிக்கொள்ளலாம்.

காதலின் ஈர்ப்பு என்பது காமத்தின் ஈர்ப்பு தான்.... அது உடலாகவும் இருக்கலாம் குணமாகவும் இருக்கலாம், தனக்கான இணையென்ற உள்ளறிவிப்பு தான் காமம். காதலும் காமமும் ஒன்று தான் !

அழகான சொல் "காமம்" !அதை கெட்ட வார்த்தையாக்கி "காதலை" புனிதமாக்கி நம்ம மக்கள் பண்ற அலப்பரை இருக்கே.... !

எழுதியவர் : (இளங்கோவன் பாலகிருஷ்ணன் அ (18-Sep-15, 9:59 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 155
மேலே