காதல் சொல்ல வந்தேன்

நான் சாலையோரம் நடக்கையில்
நீ என்னை கடந்துச் சென்றாய்

மலரின் வாசனையைய் நாசி வரை
கொண்டு வந்து சேர்த்துவிட்டு
செல்லும் தென்றலைப் போல

உன் அழகை
என் விழி வரை கொண்டு வந்து
சேர்த்து விட்டு சென்றாய்

என் இதயம்
பரிமான வளர்ச்சி பெற்றது
காதலாக!

பின்பு ஒவ்வொரு நாளும்
என் இதயம் தொலைத்த சாலையில்
எனக்கென்று இடம் தேடி அலைந்தேன்
உன்னை காண

அதே வேளையில்
உன்னை காணாத நாட்களில்
இதயம் பரிதவித்து போகிறது

சலனம் அற்ற
இரவுகளில்
ஒலமிட்டு அழுகிறது

காகிதங்களை
எழுதுகோலும் கைகளும்
ஒரே நேரத்தில் தான் காதல் கொள்கின்றன

ஆனால்
எழுதுகோலின் காதல் எழுத்துகளாக
கையின் காதல் ரேகையாக

எழுதுகோலின் காதல் அறியப்பட்ட காதல்
கையின் காதல் அறியப்படா காதல்
என் காதல் கூட நீ அறியப்படா காதல் தான்

நிழலாடும் இரவுகள்
இலைகளுக்கு இடையே விளையாடும்
நிலவின் ஒளி
கண் சிமிட்டி மறையும் வாகனங்கள்
எல்லாம் ஒருமித்திருக்க

என் காதல் நண்பனாய்
பக்கத்தில் நிற்கிறது நடைபாதை தந்திக்கம்பம்

நீ அறியப்படா காதலை
உன்னிடம் அறிமுகப்படுத்த காத்திருக்கிறேன்

நம் காதலை அங்கீகரிக்க போகும்
சாலையில்

செவிகள் இல்லையென்றாலும்
நாம் பரிமாறிக் கொள்ள போகும்
வார்த்தைகளை

கூர்ந்து கவனிக்க காத்திருக்கின்றன
சுவற்றில் வரையப்பட்ட எழுத்துகள்...........

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (19-Sep-15, 11:54 am)
பார்வை : 429

மேலே